நோயின்றி வாழ்வதற்கு உடல் சுகாதாரமாக இருப்பது அவசியம், குறிப்பாக கைகள். பல இடங்களில் பல பொருட்களை கைகளால் தொடுகிறோம். இதனால் கண்களுக்கு தெரியாத பல கிருமிகள் கைகளில் ஒட்டிக்கொள்ளும்.
கை கழுவுதல்
கைகளை கழுவாமல் உணவு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் அனைவரும் கைகளை கழுவுவது பொதுவான சுகாதார பழக்கமாகும். ஆனால் அப்படி கைகளை கழுவும் போது இந்த 6 தவறுகளை செய்யக்கூடாது.
சோப்பு
நம்மில் பெரும்பாலானோர் கைகளை வெறும் தண்ணீரில் மட்டும் கழுவுகிறோம். ஆனால் இப்படி கழுவினால் கிருமிகள் அழியாது. அதனால் கைகளை சோப்பு அல்லது ஹேண்ட் வாஷர் பயன்படுத்தி கழுவுங்கள்.
நேரம்
சிலர் வெறும் 3 முதல் 5 நொடிகள் மட்டும் கைகளை தண்ணீரில் நனைத்து விட்டு செல்வார்கள். இப்படி செய்வதால் கைகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும். எனவே கைகளை குறைந்தது 15 முதல் 20 வினாடிகள் வரை கழுவவும்.
சூடான நீரை தவிர்க்கவும்
சூடான நீர் கிருமிகளை அழிக்கும் என்றாலும் கைகளை சூடான நீரில் கழுவுவதால் சருமம் உலர்ந்து விரிசல் ஏற்படும். இது எளிதில் நோய் தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
தேய்த்து கழுவுங்கள்
கடமைக்கு என்று கைகளை கழுவாமல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் கைகளை கழுவ வேண்டும். அதற்கு நகங்கள், கைகளின் பின்புறம், விரல்களுக்கு இடையில் கழுவ மறக்காதீர்.
உலர்த்தாமல் இருப்பது
உலர்ந்த கைகளை விட ஈரமான கைகள் பாக்டீரியா மற்றும் கிருமிகளைப் பரப்ப அதிக வாய்ப்புள்ளது. அதனால் கைகளை கழுவிய பின்னர் சரியாக கைகளை உலர்த்தவும்.
அழுக்கு துணி
கைகளை கழுவிய பின்னர் அழுக்கு துணியில் கைகளை துடைப்பத்தால் எந்த பலனும் இல்லை. இதனால் மீண்டும் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. எனவே கைகளை கழுவிய பிறகு சுத்தமான துணியில் கைகளை துடைக்கவும்.