முகக்கவசம் அணிவதால் கிடைக்கும் 6 நன்மைகள்


Alagar Raj AP
08-01-2025, 14:54 IST
www.herzindagi.com

முகக்கவசம்

    கொரோனா பரவல் காலத்தில் இருந்து முகக்கவசம் அணிவது சிலருக்கு வழக்கமானதாக மாறிவிட்டது. இன்னும் சிலருக்கோ முகக்கவசம் அணிவது பேஷனாக மாறிவிட்டது. முகக்கவசம் அணிவதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.

நோய்வாய்ப்படுவதை தடுக்கும்

    காற்றின் மூலம் பரவும் நோய்களில் இருந்து நம்மை முகக்கவசம் பாதுகாக்கும்.

காற்று மாசு

    பெருநகரங்களில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சுவாச நோய், கார்டியோவாஸ்குலர் நோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முகக்கவசம் அணிவதன் மூலம் இந்த பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்.

பிறர் பாதுகாப்பு

    உங்களுக்கு காசநோய் போன்ற ஏதேனும் பாதிப்பு இருந்தால், நீங்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் உங்களை சுற்றியுள்ளவர்களை நோயிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள்.

ஒவ்வாமையை தடுக்கும்

    தூசி, மகரந்தம், புகை போன்ற சுவாச ஒவ்வாமை பாதித்தவர்கள் முகக்கவசம் அணிவதால் ஒவ்வாமை பாதிப்பை தடுக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

    பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்தால், அது அவர்களுக்கு நோயிலிருந்து தடுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

கிருமி பரவலை தடுக்கும்

    மற்றவர்கள் இருமும் போதும், தும்மும் போது வெளியேறும் கிருமிகளை கொண்ட நீர் துளிகளில் இருந்து நோய் பரவும். இதனால் முகக்கவசம் அணிவதால் மற்றவர்களிடம் இருந்து பரவும் நோயை தடுக்கலாம்.