தொப்பையைக் குறைக்க உதவும் 5 சிறந்த கார்டியோ பயிற்சிகள்


Jansi Malashree V
10-12-2024, 22:14 IST
www.herzindagi.com

    இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இல்லாதவர்கள் கீழ்வரக்கூடிய கார்டியோ பயிற்சிகள் பின்பற்றுங்கள்

படிக்கட்டு ஏறுதல்:

    வயிற்றில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதற்கு நேரம் கிடைக்கும் போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நல்லது.

சைக்கிள் ஓட்டுதல்:

    கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாக உள்ளது சைக்கிள் ஓட்டுதல். அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சைக்கிளைப் பயன்படுத்துங்கள். இது தொப்பையை விரைவாக குறைப்பதற்கு உதவும்.

நடந்து செல்லுதல்:

    நடைப்பயிற்சிக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியில் சென்றாலும் வழக்கத்தை விட கொஞ்சம் வேகமாக நடந்து செல்லவும். இத்தகைய செயல் உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க உதவுகிறது.

நீச்சல்:

    உடல் தசைகளை வலுப்படுத்தி வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கு கார்டியோ பயிற்சிகளில் ஒன்றான நீச்சல் மேற்கொள்ளலாம்.

ஸ்கிப்பிங்:

    எலும்புகள் மற்றும் கால்களை வலுப்படுத்துவதோடு கொழுப்பைக் குறைவதற்கு ஸ்கிப்பிங் மேற்கொள்ளலாம்.