முதலில் கோதுமை ரவை மற்றும் நாட்டுச் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
ஸ்டெப் 2
அரைத்த கோதுமை ரவை கலவையில் பால், நெய், தயிர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஸ்டெப் 3
அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தடவி அதில் கேக் கலவையை ஊற்றி சமமாக பரப்பி அதன் மேல் உலர் பழங்களை தூவி விடுங்கள்.
ஸ்டெப் 4
கேக் கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மிதமான தீயில் அரை மணி நேரம் வேக வைத்து எடுக்கவும்.
ஸ்டெப் 5
கேக் நன்றாக வெந்த பிறகு, சூடு தணிந்ததும் துண்டுகளாக கட் பண்ணி எடுத்தால் அருமையான கோதுமை ரவா கேக் ரெடி.
கோதுமை ரவா கேக்
கோதுமை ரவை, நாட்டுச் சர்க்கரை காம்போவில் செய்யப்படும் இந்த கோதுமை ரவா கேக்கை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் செஞ்சு பாருங்க.