15 ஸ்லைஸ் கோதுமை பிரட், 100 கிராம் சின்ன வெங்காயம், 2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு, கால் கிலோ தக்காளி, ஒரு தேக்கரண்டி கடுகு, 8 மிளகாய் வற்றல், 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
தேவையான பொருட்கள் 2
2 சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியா, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், கொத்தமல்லி தழை, உப்பு
ஸ்டேப் 1
கோதுமை பிரட்டை சிறு துண்டுகளாக பிய்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 2
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக சிவக்க வறுத்து எடுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
ஸ்டேப் 3
பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அத்துடன் சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் போட்டு நன்கு மசித்து வதக்கவும்.
ஸ்டேப் 4
தக்காளி வெங்காயம் நன்கு மசிந்தவுடன் அரைத்து வாய்த்த பொடியை போட்டு நன்கு கிளறி இறுதியாக கோதுமை பிரட் துண்டுகளை போட்டு கவனமாக பிரட்டி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
ஸ்டேப் 5
அடுப்பில் இருந்து இறக்கிய பின் கொத்த மல்லி தழைகளை தூவி அலங்கரித்து சுவையயன கோதுமை பிரட் தக்காளி மசாலாவை பரிமாறலாம்.