பால் இல்லாமல் அதே சுவையில் பனீர் செய்வது எப்படி?


Alagar Raj AP
29-11-2024, 17:46 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    1/4 கிலோ வேர்க்கடலை, 1 கப் வினிகர் அல்லது 1 கப் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர்

ஸ்டெப் 1

    இரவு முழுவதும் தண்ணீரில் வேர்க்கடலை ஊற வைக்கவும். வேர்க்கடலை நன்றாக ஊறியதும் அதன் தோலை நீக்கவும்.

ஸ்டெப் 2

    அதன் பின் வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

ஸ்டெப் 3

    அரைத்த வேர்க்கடலையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் ஒரு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

ஸ்டெப் 4

    அதன் பின் கொதிக்கும் வேர்க்கடலை பாலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கொண்டி 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பால் திரிஞ்சதும் அடுப்பில் இருந்து இறக்கி சூடு தணியும் வரை காத்திருங்கள்.

ஸ்டெப் 5

    அடுத்ததாக ஒரு வடிகட்டியை மேல் சுத்தமான மெல்லிய காட்டன் துணியால் மூடி அதன் மேல் வேர்க்கடலை பாலை ஊற்றி நன்கு பிழிந்து வடிகட்டவும். வடிகட்டி தண்ணீர் முழுவதையும் அகற்றவும்.

ஸ்டெப் 6

    அதன் பின் பிழிந்த துணி மூட்டையின் மேல் கனமான பொருளை வைத்து இரண்டு மணி நேரம் தண்ணீர் முழுவதையும் இறங்க விட்டால் பன்னீர் உலர்ந்து துணியில் தேங்கி இருக்கும்.

    பனீரை துண்டுகளாக வெட்டி காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும். அதன் பின் தேவையான போது எடுத்து உணவுகளுக்கு பயன்படுத்தலாம்.