பாண்டிச்சேரி ஸ்பெஷல் கறி போண்டா ரெசிபி


Alagar Raj AP
24-08-2024, 10:00 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    1/4 கிலோ எலும்பு இல்லாத கோழி கறி, ½ கப் பஜ்ஜி மாவு, தோல் உரித்த 1 உருளைக்கிழங்கு, 1 பெரிய வெங்காயம், 1 கப் முட்டைகோஸ் 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 ஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு, தண்ணீர்

ஸ்டெப் 1

    குக்கரில் கோழி கறி, நறுக்கிய உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரை வேக வைக்கவும்.

ஸ்டெப் 2

    வேகவைத்த கோழி கறியை உதிர்த்து, உருளைக்கிழங்கை மசித்து தனியாக வைக்கவும்.

ஸ்டெப் 3

    அடுத்ததாக ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, முட்டைகோஸ், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். மிகவும் பொன்னிறமாக மாறும் வரை வதக்க கூடாது.

ஸ்டெப் 4

    அதன் பின் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உதிர்த்த கோழி கறியை முட்டைகோஸ் கலவையுடன் சேர்த்து கலந்து, சிக்கன் மசாலா, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிண்டுங்கள்.

ஸ்டெப் 5

    வதக்கிய கறியை உருண்டையாக பிடித்து அதை கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    அவ்வளவுதான் சூப்பரான சுவையான பாண்டிச்சேரி ஸ்பெஷல் கறி போண்டா ரெடி.