2 கப் கோதுமை மாவு, 2 கட்டு பசலைக்கீரை, எண்ணெய், உப்பு, 2 பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன், சீரகத்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், அரை ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்.
ஸ்டேப் 1
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஸ்டேப் 2
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் மற்றும் பசலைக்கீரையை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப் 3
வதக்கிய பசலைக்கீரையை அரைத்து வைத்து கொள்ளவும்.
ஸ்டேப் 4
அதன் பின் ஒரு பாத்திரத்து கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த பசலைக்கீரை விழுது, கரம் மசாலா, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிணைத்து வைத்து கொள்ளவும்.
ஸ்டேப் 5
பிறகு மாவை உருண்டையாக உருட்டி, தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் 6
தேய்த்து வாய்த்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பசலைக்கீரை பூரி தயார்.