மதுரை சௌராஷ்ட்ரா ஸ்டைல் புளியோதரை பேஸ்ட் செய்வது எப்படி?


Alagar Raj AP
16-06-2024, 10:00 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    150 கிராம் புளி, 100 மில்லி கடலை எண்ணெய், 10 சிவப்பு மிளகாய், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் வெந்தயப் பொடி, 1/2 டீஸ்பூன் பெருங்காயம், ஒன்றே இன்ச் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கல் உப்பு

ஸ்டெப் 1

    முதலில் புளியில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பிறகு புளியை நன்றாக கரைத்து புளி சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    ஒரு கடாயில் கடலை எண்ணெய் விட்டு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து அதில் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஸ்டெப் 3

    அதன் பின் புளி சாறு, மஞ்சள் தூள், தேவையான அளவு கல் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கிண்டி கொண்டே இருங்கள்.

ஸ்டெப் 4

    அடுத்ததாக வெந்தய பொடி சேர்த்து கிண்டி 5 நிமிடம் சிம்மில் வைத்து முடியை வைத்து மூடி கொதிக்க வைக்கவும்.

ஸ்டெப் 5

    5 நிமிடம் கொதிக்க வைத்த அடுப்பில் இருந்து இறக்கி மூடியை திறந்து பார்த்தல் மதுரை சௌராஷ்ட்ரா ஸ்டைல் புளியோதரை பேஸ்ட் ரெடி.

சேமிக்கும் முறை

    காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் 6 மாதம் வரை கெடாமல் இருக்கும். 15 நாளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து சூடு பண்ணி வைக்கவும்.