சாக்லேட்டுக்கு பதில் நம்ம ஊரு மிட்டாய்களை கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்


Alagar Raj AP
08-02-2024, 16:27 IST
www.herzindagi.com

    இந்த காதலர் தினத்தில் நீங்கள் காதலிக்கும் நபருக்கு சாக்லேட்டுக்கு மாற்றாக சற்று வித்தியாசமாக நம்ம ஊரு மிட்டாய் வகைகளை பரிசாக அளிக்கலாம்.

ஜவ்வு மிட்டாய்

    தற்போதைய காலகட்டத்தில் ஜவ்வு மிட்டாயை பார்ப்பதே அரிது. அதை தேடி கண்டுபிடித்து உங்கள் காதல் துணைக்கு பரிசாக அளித்தால் புதிய அனுபவமாக இருக்கும்.

சீனி மிட்டாய்

    உங்கள் வண்ணமயமான காதலுக்கு கலர் கலராக ஜெல்லி போல் இருக்கும் சீனி மிட்டாயை உங்கள் காதல் துணைக்கு பரிசாக அளிக்கலாம்.

ஆரஞ்சு மிட்டாய்

    சுதந்திர தினத்தில் பள்ளிகளில் கொடுக்கும் ஆரஞ்சு மிட்டாயை உங்கள் காதல் துணைக்கு கொடுக்கலாம். நீங்கள் பள்ளி பருவத்தில் இருந்து காதலிக்கும் ஜோடியாக இருந்தால் உங்களுக்கு இந்த ஆரஞ்சு மிட்டாய் பள்ளி காதல் நினைவுகளை ஏற்படுத்தும்.

சீரக மிட்டாய்

    சீரகம் மூலம் கலர் கலராக தயாரிக்கப்படும் இது சீரக மிட்டாய் அல்லது பல்லி மிட்டாய் என அழைக்கப்படுகிறது. இந்த மிட்டாயை உங்கள் காதல் துணைக்கு பரிசாக அளிக்கலாம். இதில் இருக்கும் சீரகம் செரிமானத்திற்கு சிறந்தது.

புளிப்பு மிட்டாய்

    ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த மிட்டாய் புளிப்பு மிட்டாய் அல்லது ஆரஞ்சு மிட்டாய் என அழைக்கப்படுகிறது. இதை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு பரிசாக அளிக்கலாம்.

    இதில் குறிப்பிட்டுள்ள மிட்டாய்கள் அனைத்தும் 90ஸ்கள் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த மிட்டாய்கள் என்பதால் 90ஸ், 80ஸ் கிட்ஸ் மற்றும் ஆரம்ப 2கே கிட்ஸ்களுக்கு தங்கள் சிறுவயது மலரும் நினைவுகளை நினைவுகூரும் தருணமாக அமையும்.