சூரிய வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் எலக்ட்ரோலைட் பானம்.. தயாரிப்பது எப்படி?


Alagar Raj AP
04-04-2024, 16:52 IST
www.herzindagi.com

    கோடையில் அதிக சூரிய வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். இதை சமாளிக்க உதவும் எலக்ட்ரோலைட் பானத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

    2 கப் தண்ணீர், அரை கப் ஆரஞ்சு சாறு, 10 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை உப்பு, 2 தேக்கரண்டி தேன்

ஸ்டேப் 1

    தண்ணீர், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, உப்பு, தேன் அனைத்தையும் ஒன்றாக நன்றாக கலக்கவும்.

ஸ்டேப் 2

    கலந்த பின் குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக குடிக்கலாம் அல்லது அப்படியே குடிக்கலாம்.

தாதுக்கள்

    இதில் உள்ள மெக்னீசியம், சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்திருக்கும்.

ஊட்டச்சத்துக்கள்

    உடலின் நீர் மற்றும் அமில அடிப்படை சமநிலையை பராமரித்து செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு சேர்க்கிறது.

கால அளவு

    இதை உலோக பாட்டிலில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் 2 நாட்கள் வரை பாதுகாப்பாக வைக்கலாம்.