ஆட்டு இரத்த கிரேவி செய்வது எப்படி? இதோ ஈசி ரெசிபி


Alagar Raj AP
20-03-2025, 19:53 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    200 கிராம் ஆட்டு ரத்தம், 5 நறுக்கிய பெரிய வெங்காயம், 2 நறுக்கிய தக்காளி,1/2 கப் துருவிய தேங்காய், 1 தேக்கரண்டி சோம்பு, 1 தேக்கரண்டி மல்லி தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/ 2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 10 மிளகு, 5 பூண்டு பற்கள், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 4 நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, எண்ணெய், உப்பு

ஸ்டெப் 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, மிளகு, கிராம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

ஸ்டெப் 2

    அடுத்ததாக மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

ஸ்டெப் 3

    வதக்கிய கலவையை மிக்ஸியில் சேர்த்து கொழகொழப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஸ்டெப் 4

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன் பின் ஆட்டு இரத்தத்தை சேர்த்து அது சுண்டும் வரை கிளறி விடுங்கள்.

ஸ்டெப் 5

    ஆட்டு இரத்தம் சுண்டியதும், அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கிளறி விடுங்கள். அதன் பின் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஆட்டு இரத்த கிரேவி

    அவ்வளவுதான் சுவையான ஆட்டு இரத்த கிரேவி ரெடி. இதை நீங்கள் தோசை, இட்லி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.