விசாகப்பட்டினத்தில் சாப்பிட வேண்டிய பேமஸ் தெருவோர உணவுகள்


Alagar Raj AP
30-06-2024, 10:00 IST
www.herzindagi.com

புனுகுலு

    உள்ளூரில் பிரபலமான சிற்றுண்டியான புனுகுலு தோசை மாவில் செய்யப்படும் போண்டா ஆகும். இதை தேங்காய் மற்றும் இஞ்சி சட்னியுடன் சாப்பிடலாம்.

முரி மிக்சர்

    விசாகபட்டின கடற்கரையில் பஞ்சமே இல்லாமல் இருக்கும் முரி மிக்சர் என்பது பொரியுடன் வெங்காயம், தக்காளி, வேர்க்கடலை, மசாலா மற்றும் மிளகாய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களை கலந்து செய்யப்படும் சிற்றுண்டி.

ஆரத்திகாயா பஜ்ஜி

    ஆரத்திகாயா பஜ்ஜி என்பது வேறு ஒன்றும் இல்லை அது வாழைக்காய் பஜ்ஜி தான். ஆனால் அதில் வறுத்த நிலக்கடலை மற்றும் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து தருவது விசாகப்பட்டினம் ஸ்பெஷல்.

போங்கு சிக்கன்

    போங்கு சிக்கன் என்றால் மூங்கில் சிக்கன். மூங்கிலில் கோழி இறைச்சியை அடைத்து செய்யப்படும் இந்த சிக்கன் உங்களுக்கு புகை நிறைந்த வித்தியாசமான சுவையை வழங்கும்.

தக்காளி பஜ்ஜி

    தக்காளியை கொண்டு செய்யப்படும் பஜ்ஜியாக இருந்தாலும் அதில் பொரி மற்றும் வறுத்த வேர்க்கடலையை நிரப்பி பரிமாறப்படுவது இந்த தக்காளி பஜ்ஜியை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

சிக்கன் 555

    சிக்கன் 555 என்பது ஆந்திர ஸ்டைல் சிக்கன். இது பெயரில் மற்றும் வித்தியாசம் இல்லை அதன் வடிவம் மற்றும் தனித்துவமான செய்முறை காரணமாக சுவையிலும் சிக்கன் 65வில் இருந்து மாறுபட்டது.

    அடுத்த முறை விசாகப்பட்டினம் செல்வதாக இருந்தால் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க. மேலும் இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பாகத்தை பின்தொடருங்கள்.