250 கிராம் நறுக்கிய பாகற்காய், 1 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 2 நறுக்கிய பச்சை மிளகாய், 2 நறுக்கிய தக்காளி, 3/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மல்லி தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் தூள், 1/2 டீஸ்பூன் வெல்லம், 5 பூண்டு பற்கள், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும் உப்பு
ஸ்டெப் 1
முதலில் ஒரு பவுலில் நறுக்கிய பாகற்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 30 நிமிடங்களுக்கு பிறகு பாகற்காயில் ஊறிய தண்ணீரை நன்றாக பிழிந்து எடுக்கவும். இப்படி செய்வதால் பாகற்காயில் உள்ள கசப்பு நீங்கிவிடும்.
ஸ்டெப் 2
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிழிந்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
ஸ்டெப் 3
அடுத்ததாக அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
ஸ்டெப் 4
அதன் பின் வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கி வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் பூண்டு பற்களை தட்டி போட்டு வதக்குங்கள்.
ஸ்டெப் 5
அடுத்ததாக மிளகாய் தூள், சாம்பார் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் வெல்லம் சேர்த்துக் கிளறுங்கள்.
பாகற்காய் சுக்கா
இறுதியாக பொரித்து வைத்துள்ள பாகற்காய் மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கினால், கசப்பே இல்லாத சுவையான பாகற்காய் சுக்கா ரெடி.