இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான 3 in 1 சைட் டிஷ் ரெசிபி
Alagar Raj AP
07-11-2024, 22:50 IST
www.herzindagi.com
தயிர் சட்னி
இட்லி, தோசை, சப்பாத்தி மூன்றுக்கும் நச்சுனு பொருந்தும் சுவையான சைட் டிஷ் தயிர் சட்னியை சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1/2 கப் தயிர், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டேபிள்ஸ்பூன் மல்லி தூள், 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், கருவேப்பிலை, எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு.
ஸ்டெப் 1
அரை கப் தயிரில் கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தனியாக வைக்கவும்.
ஸ்டெப் 2
அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், இஞ்சி விழுது, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்.
ஸ்டெப் 3
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஸ்டெப் 4
வெங்காயம் வதங்கியதும் தயிர் கலவையை சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
அவ்வளவு தான் இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான 3 in 1 சைட் டிஷ் தயிர் சட்னி ரெடி. இதை நீங்கள் 10 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.