செட்டிநாடு தின்பண்டம் ‘மணகோலம்’ செய்யலாம் வாங்க


Alagar Raj AP
16-01-2025, 19:49 IST
www.herzindagi.com

மணகோலம் ரெசிபி

    பார்ப்பதற்கு காரச்சேவு போல் இருந்தாலும் இதன் சுவை இனிப்பாக இருக்கும். செட்டிநாடு பகுதிகளில் பிரபலமாக இருக்கும் இந்த பலகாரத்தின் பெயர் ‘மணகோலம்.’ இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

    150 கிராம் பச்சரிசி, 1/2 கிலோ பாசிப்பருப்பு, 1/4 கிலோ கடலை பருப்பு, 1/4 கிலோ உளுந்தம் பருப்பு, 1/4 கிலோ பொட்டுக்கடலை, 3/4 கிலோ வெல்லம், 1/4 கிலோ சர்க்கரை, 1 பவுல் துருவிய தேங்காய், ஏலக்காய், எண்ணெய் மற்றும் நெய்

ஸ்டெப் 1

    பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    தொடர்ச்சியாக அரைத்த மாவுகளை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

ஸ்டெப் 3

    அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, முறுக்கு பிழியும் அச்சில் மாவை சேர்த்து, எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும். வெந்த மணகோலத்தை ஒரு பாத்திரத்தில் காரச்சேவு அளவில் உதிர்த்து விடுங்கள்.

ஸ்டெப் 4

    அதன் பின் நறுக்கிய தேங்காய் மற்றும் பொட்டுக்கடலையை நெய்யில் வறுத்து மணகோலத்தில் சேர்த்து கிண்டவும். பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தூளாக்கி மணகோலத்தின் மீது தூவி விடுங்கள்.

ஸ்டெப் 5

    இறுதியாக வெல்லப்பாகு சுட சுட காய்ச்சி மணகோலத்தின் மீது ஊற்றிக் கொண்டே, கரண்டியினால் கிளறி கொண்டே இருங்கள். அப்போது தான் வெல்லப்பாகு கெட்டியாகாமல் மணகோலத்தில் சமமாக படரும்.

மணகோலம்

    அவ்வளவு தான் செட்டிநாடு பலகாரம் மணகோலம் ரெடி. இதை நீங்கள் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டு போகாது.