பதற்றத்தை குறைக்க உதவும் சிறந்த யோகாசனங்கள்


Raja Balaji
25-03-2024, 08:43 IST
www.herzindagi.com

    பதற்றத்தை குறைத்து மனதை அமைதிப்படுத்த வேண்டுமா ? இந்த கதையில் குறிப்பிட்டுள்ள யோகாசனங்களை பயிற்சி செய்யவும்.

பாலாசனம்

    இந்த ஆசனம் குழந்தையின் தோரணை என குறிப்பிடப்படுகிறது. மன அழுத்தத்தை குறைக்க இது அற்புதமான ஆசனமாகும்.

சவாசனம்

    சாதாரணமாக கண்களை மூடி தூங்குவது போல் இருக்கும் சவாசனம் பதற்றத்தை குறைக்க உதவும்.

மர்ஜரி ஆசனம்

    இது CAT COW pose என்று சொல்லப்படுகிறது. இந்த ஆசனத்தில் ஒரு முறை பூனையாகவும், மற்றொரு முறை மாடு போலவும் தோன்றுவீர்கள். இது பதற்றத்தை விடுவித்து மனதை அமைதிப்படுத்துகிறது.

உத்தனாசனம்

    சற்று கடினமான இந்த ஆசனம் உங்களை ஓய்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். சிறந்த பலன்களை பெற 30 விநாடிகளுக்கு தலா மூன்று செட் என்ற கணக்கில் தினமும் மூன்று முறை செய்யவும்.

சுவர் மீது கால்

    அதிக மன அழுத்தத்துடன் இருப்பதாக தோன்றினால் இந்த நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம். கால்களை தரையில் வைத்து படுப்பதற்கு பதிலாக சுவற்றுடன் ஒட்டி படுக்கவும். இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அமைதியான உணர்வை ஊக்குவிக்கிறது.

    இது போன்ற கதைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.