சைனஸ் பிரச்சனையால் சிரமப்படுகிறீரகளா? சைனஸ் குணமாக இயற்கை தீர்வை தேடுகிறீர்களா? இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள சில எளிய யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்யுங்கள்…
Image Credit : freepik
அனுலோம் விலோம் பிராணாயாயம்
இந்த அற்புத சுவாச பயிற்சியானது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆசனம் சிறந்த பலன்களை கொடுக்கும்.
Image Credit : freepik
புஜங்காசனம்
கோப்ரா போஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆசனமானது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. புஜங்காசனம் செய்வது அனைத்து சுவாச பிரச்சனைகளுக்கும் நன்மை தரும்.
Image Credit : freepik
உஸ்த்ராசனம்
ஒட்டக போஸ் என்று பிரபலமாக அறியப்படும் இந்த யோகாசனம் சைனஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இந்த பயிற்சியானது நாசிப் பாதையில் உள்ள அடைப்பை நீக்குகிறது.
Image Credit : freepik
பாஸ்த்ரிகா பிராணயாமம்
இது சைனஸ் பிரச்சனைக்கு நிவாரணம் தரும் மற்றொரு சுவாசம் பயிற்சியாகும். இதை முறையாக பயிற்சி செய்து வந்தால் நெஞ்சு சளி, தொண்டை புண் மற்றும் சளி குணமாகும்.
Image Credit : freepik
சேதுபந்தாசனம்
பிரிட்ஜ் போஸ் என்று அறியப்படும் இந்த ஆசனமானது மூட்டு வலியை குறைக்கிறது. இதை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் சைனஸ், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்தும் விடுபடலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.