தினமும் வெறும் காலில் புல் தரையில் நடந்தால் உடலில் ஏற்படும் மேஜிக்!
Alagar Raj AP
28-03-2024, 12:36 IST
www.herzindagi.com
ஆற்றல் அதிகரிக்கும்
புல் தரையில் நடப்பது நமது உடலில் இழந்த ஆற்றலை ரீசார்ஜ் செய்ய உதவுகிறது. பூமியின் எலக்ட்ரான்களை உறிஞ்சுவதன் மூலம் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வலி நிவாரணம்
புல் தரையில் நடப்பது வலி நிவாரணி விளைவுகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது உடலில் வலி மற்றும் அசௌகரியத்தை போகும் இயற்கையான வலி நிவாரணியாகும்.
தூக்கம் மேம்படும்
புள் தரையில் நடப்பதால் உடல் எலக்ட்ரான்களுடன் தொடர்பு ஏற்பட்டு தூக்கத்தின் தரம் மேம்படும்.
மன அழுத்தம் குறையும்
வெறுங்காலுடன் புல் தரையில் நடப்பது மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் போன்றவற்றை மறுசீரமைக்க உதவுகிறது. இது அதிக அமைதி மற்றும் தளர்வு உணர்விற்கு வழிவகுத்து பதட்டத்தை விடுவிக்க அனுமதிக்கிறது.
வீக்கத்தை குறைக்கிறது
புல் தரையில் நடப்பதால் இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்றவற்றுடன் தொடர்புடைய வீக்கத்தை குறைக்கிறது.
ஒவ்வாமையை நீக்குகிறது
புல் தரையில் வெறும் கால்களுடன் நடப்பதால் பாதங்களின் மென்மையான செல்களுடன் தொடர்பு ஏற்பட்டு நரம்புகளைத் தூண்டி மூளைக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. இதனால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
பாதங்களுக்கு மசாஜ்
புல் தரையில் நடப்பது பாதங்களுக்கு கிடைக்கும் இயற்கையான மசாஜ். இது கால்களின் தசைகளை தளர்வடைய செய்யும்.