உடல்எடையைக் குறைக்க நடிகை வரலட்சுமியின் டிப்ஸ்


Raja Balaji
05-03-2024, 22:07 IST
www.herzindagi.com

    கொழு கொழுவென இருந்த நடிகை வரலட்சுமி நான்கே மாதங்களில் உடல் எடையைக் குறைத்து அனைவரையும் வியக்க வைத்தார். அவரது உடற்பயிற்சி திட்டமும் உணவுமுறையும் எடை இழப்புக்கான காரணங்களாகும். இது எடையைக் குறைக்க விரும்புவோருக்கு நிச்சயம் உதவும்

அதித உடற்பயிற்சி

    வரலட்சுமி தினமும் அதிதீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார். கார்டியோ மற்றும் உடல் வலிமை அதிகரிக்கும் பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறார். இது கலோரிகளை எரிக்க உதவுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்துகிறது.

தினமும் பயிற்சி

    எந்தவொரு இடையூறாக இருந்தாலும் வரலட்சுமி தினமும் உடற்பயிற்சி செய்வதை தவறவிடுவதில்லை.

யோகா, தியானம்

    வரலட்சுமி தினமும் யோகா மற்றும் தியானம் செய்து முழுமையான நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறார். இவை மனத் தெளிவு மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு பங்களிக்கின்றன.

உணவு கட்டுப்பாடு

    உணவு அளவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற கலோரிகள் அதிகமாக இல்லாமல் சரியான அளவு ஊட்டச்சத்துக்களை தன் உடல் பெறுவதை உறுதி செய்கிறார்.

ஸ்நாக்ஸ்

    வரலட்சுமி நட்ஸ் மற்றும் பழங்கள் போன்ற அடர் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுகிறார். இது ஆற்றல் மட்டங்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது

    இதுபோன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.