உடல் எடையை குறைக்க இளம் வயதினர் எப்படியான உடற்பயிற்சியையும் செய்துவிடுவார்கள். ஆனால் வயதானவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய உடலில் தெம்பு இருக்காது. அதனால் வயதானவர்கள் உடல் எடையை குறைக்க இந்த 6 நாற்காலி யோகாசனங்களை முயற்சிக்கலாம்.
பத்மாசனம்
தாமரை ஆசனம் என்று அழைக்கப்படும் பத்மாசனம் செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். இதன் மூலம் நீங்கள் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்
பரிவர்த்த உட்கட்டாசனம்
இந்த ஆசனம் உங்கள் வயிற்று தசைகளை செயல்படுத்த உதவுகிறது. இதனால் உங்கள் வயிறு கொழுப்பு கரையும்.
தடாசனம்
உங்கள் எடையைக் குறைக்க உதவுவதில் தடாசனம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். இந்த ஆசனம் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.
பரிவர்த்த உத்கட கோணாசனம்
பரிவர்த்த உத்கட கோணாசனம் உங்கள் வயிற்று உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து சிறந்த செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
கருடாசனம்
கழுகு ஆசனம் எனப்படும் கருடாசனம் கணுக்கால், தொடைகள் மற்றும் இடுப்புகளை மையமாக வைத்து செய்யப்படுகிறது. இந்த ஆசனம் உங்கள் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கும் கலோரி எரிப்புக்கும் சிறந்தது.
பிரசரிதா படோட்டானாசனா
இந்த ஆசனம் உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை தூண்டி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதன் மூலம் உடல் எடை குறைவதற்கு உதவும்.