Valentine's Day 2024: உங்கள் கணவரை கவர தனித்துவமான காதலர் தின பரிசுகள்
Alagar Raj AP
10-02-2024, 13:00 IST
www.herzindagi.com
இந்த ஆண்டிற்கான காதல் தினத்தை கொண்டாடும் வகையில் உங்கள் கணவருக்கு நீங்கள் வைத்திருக்கும் காதலை உணர்த்தும் வகையில் அவருக்கு பரிசளிக்க சில யோசனை பட்டியல்.
ஸ்மார்ட்வாட்ச்
உங்கள் கணவர் புதிய தொழில்நுட்பங்களை விரும்புவராகக இருந்தால் அவருக்கு ஸ்மார்ட்வாட்சை பரிசாக தரலாம். அவர் அந்த ஸ்மார்ட்வாட்சில் நேரம் பார்க்கும் போது அவர் உங்களைப் பற்றி நினைப்பார்.
பர்ஸ்
ஆண்கள் தங்கள் பர்ஸை அதிகம் விரும்புவார்கள். பழைய பர்ஸை மாற்ற மனதில்லாமல் அதேயே உபயோகித்து வருவார்கள். இதனால் உங்கள் கணவருக்கு புதிய பர்ஸ் வாங்கி கொடுத்தால் உங்கள் கணவர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கலாம்.
காப்பு
பெரும்பாலான ஆண்கள் கையில் காப்பு அணிவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆகையால் உங்கள் கணவருக்கு காப்பு வாங்கி கொடுத்தால் அது எப்போதும் உங்கள் கணவர் கையிலே இருக்கும்.
ஷேவிங் கிட்
ரேஸர், டிரிம்மர் உள்ளடக்கிய ஷேவிங் கிட் வாங்கி தருவதால் உங்கள் கணவரை எப்போதும் அழகாக வைத்திருக்கும் பரிசாக அமையும்.
தலைக்கவசம்
உங்கள் கணவர் பைக் பிரியராக இருந்தால் அவருக்கு தலைக்கவசம் வாங்கி தரலாம். உங்கள் கணவர் பைக்கில் செல்லும் போது நீங்கள் வாங்கி கொடுத்த தலைக்கவசம் அவரை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
வீடியோ கேம்ஸ்
சிறு வயதில் பல ஆண்களுக்கு வீடியோ கேம்ஸ் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் ஆகையால் உங்கள் கணவருக்கு வீடியோ கேம்ஸை பரிசாக கொடுத்தால் அவருக்கு சிறு வயது ஆசை நிறைவேறும். நீங்களும் உங்கள் கணவரோடு சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாட வாய்ப்பு அமையும்.