பொங்கல் பண்டிகைக்கு விறுவிறுவென தயாராகும் தமிழகம்


Alagar Raj AP
09-01-2024, 16:32 IST
www.herzindagi.com

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலார்கள் உள்ளிட்டோர் பொங்கல் பண்டிகை விற்பனைக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

மஞ்சள் குலை

    புதிதாக திருமணமான பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீா் கொடுப்பது வழக்கம். இதில் இடம்பெறும் பிரதான பொருளான மஞ்சள் குலை ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் அதிகம் விவசாயிகளால் அறுவடை செய்யப்படுகிறது.

பொங்கல் பானை

    பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வைப்பதற்காக பொங்கல் பானையை பயன்படுத்துவது மற்றும் புதுமண தம்பதிகளுக்கு சீராக கொடுப்பதற்கும் பானை வாங்குவது வழக்கம். இதற்காக பொங்கல் பானை விற்பனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரும்பு

    கரும்பு அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புகளை விற்பனை செய்யும் பணியில் வியாபாரிகள் தீவிரம். ரேஷன் மூலமாகவும் நுகோருவோர்க்கு பொங்கல் பரிசாக கரும்பு வழங்கப்படுகிறது.

பித்தளை பொங்கல் பானை

    பித்தளை பாத்திரங்களுக்கு பெயர் போன கும்பகோணத்தில் பித்தளை பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதிகப்படியாக இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது விற்பனை செய்யப்படுகிறது.

பனங்கிழங்கு

    பொங்கல் பண்டிகை ஷாப்பிங்கில் பனங்கிழங்கும் கண்டிப்பாக இருக்கும். மற்ற பொருட்களை வாங்குவது போல் பனங்கிழங்கு வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறனற்றனர். ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் மாவட்டங்களில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகமாக இருப்பதால் அங்கு மலிவான விலையில் கிடைக்கும்.

வாழையிலை

    எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் வாழையிலையின் தேவை அங்கு கண்டிப்பாக இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழை விவசாயிகள் வாழையிலையை அறுவடை செய்ய தயாரக உள்ளனர்.