Best Food Cities : இந்தியாவின் சிறந்த உணவு நகரங்கள் இது தான்!
Alagar Raj AP
18-01-2024, 14:21 IST
www.herzindagi.com
சிறந்த 100 உணவு நகரங்களை டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 5 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளது.
மும்பை
பட்டியலில் முதல் இந்திய நகரமாக மும்பை 35 வது இடத்தை பிடித்துள்ளது. அதில் பேல்பூரி, பாவ் பாஜி, வடபாவ், மோடக், பானிபூரி ஆகிய உணவுகள் மும்பையின் சிறந்த உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்
பட்டியலில் இரண்டாவது இந்திய நகரமாக ஹைதராபாத் 39 வது இடத்தை பிடித்துள்ளது. ஹைதராபாத்தின் சிறந்த உணவுகளாக ஹைதராபாத் பிரியாணி, பெசரா தோசை, இட்லி, சட்னி, கீர் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி
சிறந்த உணவு நகரங்களின் பட்டியலில் 56 வது இடத்தை பிடித்து இந்திய நகரங்களில் 3 வது இடத்தை டெல்லி பிடித்துள்ளது. தால் மக்கானி, பட்டர் சிக்கன், நிஹாரி, பகோரா, கஜர் கா ஹல்வா உள்ளிட்ட உணவுகள் சிறந்த உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை
சிறந்த உணவு நகரங்களின் பட்டியலில் 65-வது இடத்தையும், இந்திய நகரங்களில் 4 வது இடத்தையும் சென்னை பிடித்துள்ளது. சிக்கன் 65, இட்லி, சட்னி, போண்டா, சாம்பார் உள்ளிட்ட உணவுகள் சென்னையின் சிறந்த உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னோ
பட்டியலில் 92 வது இடத்தை லக்னோ பிடித்துள்ளது. கலூட்டி கபாப், கோர்மா, நிஹாரி, சாட், குல்ஃபி ஃபலூடா உள்ளிட்ட உணவு வகைகள் சிறந்த உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் மூன்று இடங்கள்
பட்டியலில் முதல் 3 இடங்களை இத்தாலியின் ரோம், போலோக்னா மற்றும் நேபிள்ஸ் ஆகிய நகரங்கள் பிடித்துள்ளது.