ஆடைகள், படுக்கைகள், குவளைகள், தரையில் படியும் காபி கறையை எளிமையாக சுத்தம் செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்தால் அது ஒரு பேஸ்ட் போல் மாறிவிடும். இது லேசான சிராய்ப்பு கிளீனராக செயல்படும். அதனால் இதை வைத்து குவளைகள், தரையில் படியும் காபி கரையை சுத்தம் செய்யலாம்.
வினிகர்
ஆடைகளில் படியும் காபி கறையை வினிகரை வைத்து சுத்தம் செய்யலாம். வினிகரில் இருக்கும் குறைந்த pH கறைகளை அகற்றும் துர்நாற்றத்தையும் நீக்கும்.
கிளப் சோடா
கிளப் சோடாவிலும் குறைந்த pH மதிப்பு இருப்பதால் அதை தண்ணீரில் கலந்து குவளைகள், தரைகள் போன்றவற்றில் படியும் காபி கரையை சுத்தம் செய்யலாம்.
பற்பசை
பற்பசை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல கறைகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். குவளைகளில் படிந்துள்ள காபி கறையை பற்பசை கொண்டு அகற்றலாம். நீங்கள் பயன்படுத்தும் பற்பசை வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.
குளிர்ந்த நீர்
ஆடைகளில் காபி கறை படிந்த உடனே குளிர்ந்த நீரை பயன்படுத்தி சுத்தம் செய்தால் காபி கறை நீங்கும். காபி கறை படிந்து தாமதமாக குளிர்ந்த நீரை பயன்படுத்தி சுத்தம் செய்தால் பயனளிக்காது.
சலவை சோப்பு
காபி கறை படிந்த ஆடையை சலவை இயந்திரத்தில் சுத்தம் செய்வதை விட சலவை சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்தால் காபி கறை நீங்கிவிடும்.