இந்தியாவில் பெரும்பாலான நாட்டு மாடுகள் அழிந்து வரும் நிலையில் தமிழக்த்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மாடுகளின் தன்மைகளை புரிந்து கொண்ட தமிழர்கள் நாட்டு மாடுகளை பாதுகாத்து வருகின்றனர்.
காங்கேயம் காளை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாடு இனம் தான் காங்கேயம் காளை. இது கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் வாழ்வதற்கான தன்மை கொண்டது. மயிலை, பிள்ளை, செவலை, காரி ஆகிய உட்பிரிவுகள் இந்த காங்கேயம் காளையில் உள்ளது.
செம்மறை காளை
செம்மறை காளை அல்லது பர்கூர் காளை ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பர்கூர் மலை பகுதிகளில் மேயக்கூடிய ஒரு மாட்டினமாகும். கரடுமுரடான இடத்தில் வாழ சிரமமான மலைக்காடில் வாழ்வதற்கான தகுதி உடையது என்பதால் மற்ற காளைகளை விட செம்மறை காளைகள் அதிகம் உழைக்கும்.
உம்பளச்சேரி காளை
உம்பளச்சேரி மாடு நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் காணப்படும் மாடினமாகும். காங்கேயம் காளைகளை உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் உம்பளச்சேரி காளை வகை உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆலம்பாடி காளை
ஆலம்பாடி காளைகள் தமிழ்நாடு அருகே கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள ஆலம்பாடி எனும் கிராமத்தில் தோன்றிய மாடு வகையாம். இவைகளை தமிழகத்தின் கிருஷ்னகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காண முடியும். முன்னே தள்ளிக் கொண்டிருக்கும் நெற்றியையும், கனத்த கொம்பையும் இந்த வகை மாடு கொண்டிருக்கும்.
துரிஞ்சித் தழை மாடு
துரிஞ்சித் தழை மாடு இலை தழைகளை மட்டும் உண்டு வாழுவதால் துரிஞ்சித் தழை என பெயர் பெற்றுள்ளது. இவைகள் குறைவாக சாப்பிட்டு பல நாள் அயராமல் உழைக்க கூடியவை. வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிள் இவைகளை கணிசமாக காண முடியும்.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கு பகிரவும். மேலும் இது போன்ற தகவலுக்கு ஹெர் ஜிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.