வாயை திறந்தாலே பொய்! கண்டுபிடிப்பது எப்படி ?


Raja Balaji
12-03-2024, 13:10 IST
www.herzindagi.com

    உளவியல் ரீதியாக உடல் மொழி குறிப்புகள் மூலம் ஒருவர் பொய் சொல்வதை கண்டுபிடிக்க முடியும். பொய் சொல்பவர்களிடம் காணப்படும் சில பொதுவான நடத்தைகள் இங்கே...

உரையாடலில் கண் தொடர்பு

    பொய் சொல்பவர்கள் பொதுவாக உரையாடலின் போது கண் தொடர்பை தவிர்க்கின்றனர். பேசும் போது கண் தொடர்பை அவர்கள் தவிர்த்தால் பொய் சொல்கிறார்கள் என அர்த்தம்.

பதட்டம்

    உண்மையை பேசும் நபர்களுக்கு பதட்டம் ஏற்படாது. உண்மையை மறைத்து பொய் பேசும் போது அதிகப்படியான பதட்டம் ஏற்படும்.

நுட்பமான செய்கை

    நுட்பமான செய்கை என்பது ஒருவர் பொய் சொல்லும்போது ஏற்படும் தற்காலிக முகபாவனை ஆகும். அவர்கள் திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் பயமும் பீதியும் அடையலாம்.

கதை கட்டுவது

    பொய்யர்கள் பொதுவாக புதிது புதிதாக கதைகளை உருவாக்குவது வழக்கம். அவர்கள் பேசும் விஷயம் குறைவான உண்மையானயுடன் ஜோடிக்கப்பட்டதாக இருக்கும்.

குரல்

    பொய் சொல்பவர்கள் பொதுவாக சத்தம் போட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு உண்மையை பேசும் நோக்கம் கிடையாது.

பொருந்தாத சைகை

    ஒருவர் பொய் சொல்லும்போது அவர்களின் சைகைகள் பேசும் வார்த்தைகளுடன் பொருந்தாமல் போகலாம். உதாரணமாக அவர்கள் இல்லை என கூறிவிட்டு ஆம் என்று தலையசைக்கலாம்.