அரிசியில் வண்டு, பூச்சி வராமல் இருக்க என்ன செய்யலாம்? இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க
G Kanimozhi
10-07-2025, 13:01 IST
www.herzindagi.com
அரிசியில் வண்டு தொல்லை
நம் வீட்டில் இப்போது அரிசியை, மூட்டையாக வாங்கி வைக்க வேண்டும் என்றாலே பயம். காரணம் அதில் வண்டு, புழு, பூச்சி பிடிக்கிறது. இதை தடுக்க என்ன செய்யலாம்.
எவர்சில்வர் டிரம்
அரிசியை முடிந்தவரை மூட்டையாக கோணிப்பையில் வைத்துக்கொள்ளாமல், ஒரு பிளாஸ்டிக் டப்பில் அல்லது எவர்சில்வர் டிரம்மில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள்
அரிசியில் பூச்சி வராமல் இருக்க லவங்கம், பிரியாணி இலை, கிராம்பு, பெருங்காயம் போன்ற பொருட்களை எல்லாம் அரிசியில் போட்டு வைக்கலாம்.
எவ்வளவு சேர்க்கலாம்?
ஒரு மூட்டை அரிசிக்கு 2 சிறிய துண்டு பெருங்காயம், 5 லவங்கம், 2 பிரியாணி இலை, என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
சுக்கு
அரிசியில் பூச்சி புழு வண்டு வராமல் இருக்க சிறிதளவு சுக்கு எடுத்து ஒரு வெள்ளை துணியில் கட்டி அரிசியில் போட்டு வைக்கலாம்.
வசம்பு
வசம்பை வாங்கி உடைக்க வேண்டாம். அப்படியே முழு முழு துண்டுகளாக அரிசியில் புதைத்து வைத்தோம் என்றால் அரிசியில் அவ்வளவு சீக்கிரத்தில் வண்டு பிடிக்காது.
ஈர்க்கை கூடாது
அரிசியில் வண்டு பிடிப்பதற்கு காரணம் ஈரக் கையுடன் அரிசியை எடுப்பதுதான். முடிந்தவரை அரிசியை ஈரம் படாமல் பார்த்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்கு பூச்சி படிக்காமல் இருக்கும்.