டயட்டில் உள்ளவர்கள் தினமும் எடுத்துக் கொள்ள புரோட்டின் நிறைந்த பாசிப்பயறு இட்லி!


S MuthuKrishnan
15-07-2024, 16:59 IST
www.herzindagi.com

தேவையான பொருட்கள்

    2 கப் பாசி பயறு, 1 கப் இட்லி அரிசி, ¼ கப் உளுந்து, 1 மேஜைகரண்டி வெந்தயம், 2 அங்குலம் தோலுரித்து நறுக்கிய இஞ்சி, 2 பச்சை மிளகாய், நறுக்கியது, வதக்க வேண்டிய பொருட்கள்: 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய், 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம், சிறிது பெருங்காயம், 1 மேஜை கரண்டி மிளகு, ¼ கப் கறிவேப்பிலை, தேவையானஉப்பு.

Image Credit : google

    ஒரு பாத்திரத்தில் பாசி பயறு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், பின்னர் இஞ்சி, பச்சை மிளகாயோடு சேர்த்து அறைக்க. இட்லி மாவு எப்படி செய்வீர்களோ அதைப்போல. புளிக்க வைக்க வேண்டும்.

Image Credit : google

    மிதமான நெருப்பின் மேல் வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க. மஞ்சள், மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து கொள்ளுங்கள் இதை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

Image Credit : google

    ஒரு ஸ்டீம் குக்கரில் போதுமான நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.இட்லி தட்டில் எண்ணை தடவி மாவை குழியில் ஊற்றவும், நீராவியில் 5-6 நிமிடங்கள் வைக்கவும்.

Image Credit : google

    ஆறிய பின், இட்லிகளை குழியிலிருந்து எடுக்கவும்.சட்னி, இட்லி பொடி அல்லது சாம்பார் உடன் பரிமாறலாம்.

Image Credit : google