யூரிக் அமிலத்தால் மூட்டு வலி உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்


Alagar Raj AP
23-09-2024, 18:00 IST
www.herzindagi.com

யூரிக் அமிலம்

    தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறாவிட்டால் மூட்டுகளில் தேங்கி வீக்கம் மற்றும் வலியை ஏற்படும். இப்படி உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் சாப்பிட கூடாத சில உணவுகள் இதோ.

மது

    அதிக அளவு மது அருந்துவது யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் என்பதால் மூட்டு வலி உள்ளவர்கள் மது அறுத்த கூடாது.

கொண்டைக்கடலை

    கொண்டைக்கடலையில் உள்ள பியூரின்ஸ் என்ற இரசாயனம் உடலில் யூரிக் அமிலத்தை உருவாக்க பங்களிக்கிறது. எனவே இதை அளவோடு சாப்பிடுவது நல்லது.

இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள்

    இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்டிருப்பதால் இது மூட்டு வலியை அதிகரிக்கும்.

சோயாபீன்

    சோயா பீன்ஸ் அல்லது சோயா உணவுகள் க் அமிலத்தை அதிகரிக்கும் உணவு என்பதால் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகள்

    ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் சில கடல் உணவுகளில் பியூரின்ஸ் இரசாயனம் அதிகம் இருப்பதால் இவை மூட்டு வலியை மோசமாக்கும். எனவே இந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சாப்பிட வேண்டியவை

    உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதில் கீரைகள் திறம்பட செயல்படும். மேலும் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களும் தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களும் யூரிக் அமிலத்தை இயற்கையாகவே குறைக்கும்.