உலர் அத்திப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
G Kanimozhi
20-02-2025, 23:53 IST
www.herzindagi.com
உடலுக்கு ஆற்றல் தரும் அத்திப்பழம்
இதய ஆரோக்கியம்
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.
புற்றுநோயை தடுக்க உதவும்
உலர் அத்திப்பழத்தில் புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நம் உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
எலும்புகள் வலுவாகும்
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். ஒரு அத்திப்பழத்தில் சுமார் 3% கால்சியம் உள்ளது.
எடை குறைக்கலாம்
ஒரு உலர் அத்திப்பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் எளிதில் எடை குறையும்.
செரிமானத்தை அதிகரிக்கும்
அத்திப்பழம் உங்கள் உணவு செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்
அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.