காய்கறி பழங்களை கழுவாமல் சாப்பிடும் நபரா நீங்க? உங்களுக்கான பதிவு தான் இது
Alagar Raj AP
22-08-2024, 14:00 IST
www.herzindagi.com
பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும், ஆனால் அவற்றை கழுவாமல் பயன்படுத்துவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரியுமா?
பூச்சிக்கொல்லி இரசாயனங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்களில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலில் பல்வேறு சிக்கலான பாதிப்புகள் ஏற்படும். அவை என்ன பாதிப்புகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை
பூச்சிக்கொல்லியால் மாசுபட்ட காய்கறி பழங்களை சாப்பிடும் போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதன் விளைவு தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஒவ்வாமை
பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் பூச்சிக்கொல்லிகள் கண் மற்றும் தோல் எரிச்சலை உண்டாகும். மேலும் வாந்தி, மயக்கம், குமட்டல், சுவாச பிரச்சனை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பிறப்பு சிக்கல்கள்
பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட பழம், காய்கறிகளை கர்ப்பிணி தாய்மார்கள் சாப்பிடுவதால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படும்.
மனநலப் பிரச்சினைகள்
குழந்தைகள் இவற்றை சாப்பிடுவதால் கவனக்குறைவு, ஹைபராக்டிவிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தடுப்பு முறை
ஒரு பாத்திரத்தில் பழம், காய்கறிகளை வைத்து தண்ணீர் மற்றும் வினிகரை ஊற்றி 15 நிமிடம் மிதமான கொதிக்க வைத்து, அதன் பின் பழம், காய்கறிகளை கழுவுங்கள். இதனால் 98 சதவீதம் பூச்சிக்கொல்லி மருந்துகள் பழம் காய்கறிகளில் இருந்து அகற்றிவிடும்.