கொள்ளு சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
G Kanimozhi
12-11-2024, 16:06 IST
www.herzindagi.com
கொள்ளு சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
உடல் வெதுவெதுப்பு
இந்த கொள்ளு பருப்பில் கார்போஹைட்ரேட் கனிம சத்துக்கள் கால்சியம் பாஸ்பரஸ் நார்ச்சத்து இரும்பு சத்து பாலி பினாள்கள் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது.
உடல் எடை குறையும்
இந்த கொள்ளு பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைக்கும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்த சர்க்கரை
நீரழிவு நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவு பொருள் இந்த கொள்ளு பருப்பு. இது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
மாதவிடாய் பிரச்சனை
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் கொள்ளு சாப்பிடுவது பெரிதும் உதவி செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்ளு பருப்பில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் உடலில் ரத்த அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.