தினமும் பொரி சாப்பிட்டால் உடலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்!


Alagar Raj AP
09-09-2024, 18:00 IST
www.herzindagi.com

உடல் எடையை குறைக்க உதவும்

    பொரியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய முழுமையான உணர்வை தரும்.

ஆற்றல்

    பொரி அரிசியால் செய்யப்படுவதால் இவற்றிலும் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும். இது உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலைத் தரும்.

குடல் ஆரோக்கியம்

    பொரியில் உள்ள நார்ச்சத்து குடலை சீராக இயங்க செய்கிறது. இதனால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் இருக்காது.

தோல் ஆரோக்கியம்

    பொரியில் காணப்படும் வைட்டமின் பி தோல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும்.

எலும்பு ஆரோக்கியம்

    பொரியில் உள்ள கால்சியம், இரும்பு, வைட்டமின் டி ஆகியவை எலும்பு செல்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

    சோடியம் குறைவாக உள்ள வெறும் பொரியை மட்டும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

பக்க விளைவுகள்

    பொரியில் அதிக கிளைசெமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பொரி அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.