நைட் ஷிஃப்ட் பணியாளர்களுக்கு பல சோர்வு, பலவீனம் மற்றும் செரிமானம் தொடர்பான பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தடுக்க இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள டயடை ஃபாலோ பண்ணுங்க.
பணிக்கு செல்லும் முன்
இரவு நேர பணிக்கு செல்லும் போது தினையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு போங்க. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
பணியின் போது
இரவு நேர பணியின் போது டீ காபி குடிப்பதற்கு பதிலாக மோர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இது உங்களை தலைவலி, அமிலத்தன்மை கோளாறு போன்றவற்றை நீக்கி உற்சாகத்துடன் இருக்க உதவும்.
பணி இடைவேளையில்
இரவு பணியின் இடைவேளையில் ஃப்ரூட் சாலட் அல்லது வெஜிடபிள் சாண்ட்விச் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிடுங்கள்.
பணி முடிந்த பிறகு
இரவு பணிக்கு பிறகு உங்கள் உணவில் வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.
சூரிய நமஸ்காரம்
இரவு பணியை முடித்த உடனே தூங்குவதால் அமிலத்தன்மை, தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை தடுக்க சூரிய நமஸ்காரத்தை 3 முறை செய்யவும்.
இந்த தகவலை நைட் ஷிஃப்ட் ஊழியர்களுக்கு பகிரவும். மேலும் இது போன்ற மற்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தை பின்தொடரவும்.