அசைவ உணவுக்கு இணையான சத்துக்கள் கொண்ட கருப்பு மொச்சையின் நன்மைகள்


Alagar Raj AP
15-04-2025, 20:02 IST
www.herzindagi.com

கருப்பு மொச்சை பயறு

    நம் நாட்டு பயறு வகைகளில் ஒன்றான கருப்பு மொச்சையில் வைட்டமின் ஏ, பி6, சி மற்றும் கே, இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செலினியம் போன்ற அசைவ உணவுக்கு இணையான சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு.

தசை வளர்ச்சி

    பொதுவாக பயறு வகைகளில் புரதம் நிறைந்திருக்கும். அதே போல் தான் கருப்பு மொச்சையிலும் புரதம் அதிகளவில் உள்ளது. இது தசை வளர்ச்சிக்கும், கலோரிகளை எதிர்ப்பதற்கும் உதவுகிறது.

செரிமானம் மேம்படும்

    பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்று அதை சாப்பிடுவதில்லை. ஆனால் கருப்பு மொச்சையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கி வயிற்றை சுத்தப்படுத்தும்.

இதய ஆரோக்கியம்

    இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் பொட்டாசியம் கருப்பு மொச்சையில் உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

நோயெதிர்ப்பு சக்தி

    கருப்பு மொச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்

நீரிழிவை கட்டுப்படுத்தும்

    கருப்பு மொச்சையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, உணவுகள் மூலம் கிடைக்கும் சர்க்கரையை இரத்தம் உறிஞ்சுவதை மெதுவாக்கும். இதனால் கருப்பு மொச்சை சாப்பிட்டால் நீரிழிவு அதிகரிக்காது.

எலும்புகள் வலுப்பெறும்

    எலும்புகள் ஆரோக்கியத்திலும் கருப்பு மொச்சையின் பங்கு உள்ளது. கருப்பு மொச்சையில் உள்ள பொட்டாசியம் சிறுநீர் வழியாக கால்சியம் வெளியேறுவதை தடுக்கும். இதனால் தக்க வைக்கப்படும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இரத்த சோகையை தடுக்கும்

    கருப்பு மொச்சையில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.