சணல் விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் உள்ளது. மேலும் இதில் உள்ள எட்டு அமினோ அமிலங்கள் மற்றும் இறைச்சிக்கு நிகரான புரதங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி
சணல் விதைகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒமேகா - 3 மற்றும் ஒமேகா - 6 ஆகிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
சணல் விதைகளில் நிறைந்துள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. மேலும் இவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எடை மேலாண்மை
சணல் விதைகளில் உள்ள குறைந்த கலோரிகள், நார்ச்சத்து ஆகியவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சணல் விதைகளில் நிறைந்துள்ள புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
பெண்களுக்கான நன்மை
சணல் விதைகளில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்யாவசிய அமிலங்கள் மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை குறைக்கிறது.
சரும ஆரோக்கியம்
சணல் விதைகளில் உள்ள வைட்டமின்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவை சரும ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. சணல் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முகப்பரு, வறண்ட சருமம் உள்ளிட்ட சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
மூளை செயல்திறன்
சணல் விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் வயது தொடர்பாக ஏற்படும் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.