அவல் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
G Kanimozhi
15-01-2025, 20:34 IST
www.herzindagi.com
அவல் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
ஈஸி டிபன்
தினமும் அரிசி சாதத்தை சாப்பிட்டு சோம்பேறித்தனமாக இருக்கும்போது அவல் வாங்கி அதை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது எண்ணெய் கடுகு சேர்த்து தாளித்து பத்து நிமிடத்தில் இந்த போகா செய்து சாப்பிடலாம்.
அஜீரணக் கோளாறு
அவல் என்பது ஒரு லேசான உணவு பொருளாகும். இதனால் நம் உணவு செரிமான செயல்முறை எளிதாக செயல்படுகிறது.
ஆற்றல்
இந்த அவலில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது நம் உடலை உற்சாகப்படுத்த தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு
இந்த அவலில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீட்டை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
மூளை ஆரோக்கியம்
அவலில் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக இருக்கவும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது
எடை குறையும்
சுவையிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளும் நார்ச்சத்தும் நிறைந்துள்ள அவல் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாது. இதற்கு பதிலாக நம் உடல் எடை எளிதாக குறைக்க இது பெரிதும் உதவும்.