குதிரைவாலி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Staff Writer
19-03-2024, 11:04 IST
www.herzindagi.com
ஊட்டச்சத்து நிறைந்த குதிரைவாலி அரிசி
எடை குறையும்
இந்த குதிரைவாலி அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் உடல் எடை குறைய உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவு குறையும்
இந்த குதிரைவாலி அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக ஜீரணிக்கப்படுவதால் நம் உடலில் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
இதய ஆரோக்கியம்
இந்த குதிரைவாலி அரிசியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பினாலிக் அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் ஆரோக்கியம்
இந்த குதிரைவாலி அரிசியில் நம் உடலுக்கு தேவையான புரதம் கால்சியம் பொட்டாசியம் வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
மலச்சிக்கல் குணமாகும்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் குதிரைவாலி அரிசி தினமும் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.