உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைக்கும் 7 உணவுகள்


Alagar Raj AP
07-11-2024, 14:23 IST
www.herzindagi.com

இன்சுலின்

    உடலில் உள்ள ஏராளமான ஹார்மோன்களில் ஒன்று தான் இன்சுலின். இன்சுலின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்கு கடத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இன்சுலின் உற்பத்தி

    கணயதில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலினை உருவாக்கி நேரடியாக இரத்த ஓட்டத்தில் வெளியிடுகின்றன. ஆனால் உடல் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

    எனவே உடலில் இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் இதோ.

பாகற்காய்

    பாகற்காயில் உள்ள சரண்டைன், பாலிபெப்டைட் பி மற்றும் வைசின் போன்ற சேர்மங்கள் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

அவகேடோ

    அவகேடோவில் நிறைந்துள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது.

இலவங்கப்பட்டை நீர்

    இலவங்கப்பட்டை நீர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

தானியங்கள்

    கோதுமை, ஓட்ஸ், பார்லி, தினை, குயினோவா உள்ளிட்ட தானியங்கள் இன்சுலின் எதிர்ப்பை குறைக்கக்கூடியது. இவற்றில் அதிகம் உள்ள நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

மீன்கள்

    கெளுத்தி, மத்தி, சூரை மீன் உள்ளிட்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள மீன்கள் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது.

நெல்லிக்காய் சாறு

    நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கணைய சுரப்பியின் செயல்பாட்டைத் தூண்டி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்கு எளிதில் கடத்தப்படும்.

தண்ணீர்

    உடலில் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழப்பு. எனவே, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.