மழைக்காலத்தில் பொதுவாக பலருக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளில் ஒன்று சளி பிடிப்பது. இதனால் மூச்சுவிட சிரமமாக இருக்கும், நிம்மதியாக தூங்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை இயற்கையாகவே போக்க உதவும் சில மூலிகை தேநீரை இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை புல் தேநீர்
ஒரு கப் வெந்நீர்ல் எலுமிச்சை புல் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி குறையும். எலுமிச்சை புல்லில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சளியை சமாளிக்க உதவும்.
புதினா தேநீர்
புதினாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பண்புகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை எதிர்த்து போராடும். மேலும் புதினாவின் காணப்படும் மெந்தால் பண்புகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.
கிராம்பு தேநீர்
4 கிராம்புகளை ஒரு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். கிராம்புகளில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கே பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடி சளியை குறைக்கும். மேலும் இது உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடலின் வெப்பநிலையை குறைக்கும்.
பிரியாணி இலை தேநீர்
பிரியாணி இலை உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது. இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
செம்பருத்தி தேநீர்
செம்பருத்தி இதழ்களில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் சளி மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சீமை சாமந்தி தேநீர்
சீமை சாமந்தி தேநீர் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளியை உருவாக்கும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை கரகரப்பை போக்கும்.