குடைமிளகாய் சாப்பிட்டால், இந்த 6 நன்மைகளையும் பெறலாம்!
Shobana Vigneshwar
27-09-2023, 06:00 IST
www.herzindagi.com
குடைமிளகாய் நன்மைகள்
குடைமிளகாயில் வைட்டமின் C, A, K, நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குடைமிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.
Image Credit : freepik
புற்றுநோயை தடுக்கலாம்
குடைமிளகாயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. புற்றுநோயின் அபாயத்தை குறைக்க சல்பர் மற்றும் லைக்கோபின் நிறைந்த குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
இரத்த சோகையை கெடுக்கும்
இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள வைட்டமின் C இரும்பு சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.
Image Credit : freepik
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அல்லது சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு(குடும்ப வரலாறு) இருந்தால் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
Image Credit : freepik
உடல் எடையை குறைக்க உதவும்
குடைமிளகாய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Image Credit : freepik
சருமத்திற்கு நல்லது
குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் C சருமத்தை பல தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. இது மூட்டுகளின் வலிமையையும் பராமரிக்க உதவுகிறது.
Image Credit : freepik
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வைட்டமின் C நிறைந்த குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை உணவில் சேர்த்து வர கொலஸ்ட்ராலின் அளவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.