முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா! வைரல் படங்கள்


Tamilmalar
09-06-2023, 11:13 IST
www.herzindagi.com

நயன்தாரா

    நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு சினிமாவில் டாப் நடிகையாக இருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார்.

Image Credit : Instagram

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

    இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நானும் ரவுடி தான் என்ற படத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது காதலிக்க ஆரம்பித்தனர். அந்த காதல் 7 ஆண்டுகள் நீடித்தது.

Image Credit : Instagram

திருமணம்

    திருமணம் இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் நடைப்பெற்றது.திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்

Image Credit : Instagram

ட்வின்ஸ்

    நயன் - விக்கி கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் ட்வின்ஸ் குழந்தைளை பெற்றுக்கொண்டனர். குழந்தைகளின் பெயரை நயன் தாரா விருது வழங்கும் ஒன்றில் அறிவித்தார்.

Image Credit : Instagram

உயிர் - உலகம்

    நயன் - விக்கி குழந்தைகளின் பெயர் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வீக் என் சிவன் ஆகும்.

Image Credit : Instagram

திருமண நாள்

    ஜூன் 9 ஆம் தேதி திருமண நாளை நயன்தாரா , விக்னேஷ் சிவன் கொண்டாடுகின்றனர். திருமண நாளை முன்னிட்டு நயன்தாரா ட்வின்ஸ் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்டை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

கேப்ஷன்

    இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்த விக்னேஷ் சிவன்’என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே’என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram