தேங்காய் எண்ணெய்,கிரேப் ஃப்ரூட் எசன்ஸியல் ஆயில், ரோஸ் மேரி ஆயில், ஜுனிபர் எசன்ஸியல் ஆயில் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்.உடலில் உள்ள தழும்பு, ஸ்ட்ரெச் மார்க்கை வேகமாக மறைய வெக்க வீட்டில் தயாரிக்கும் அரோமா ஆயில் தயார்.
எப்படி உபயோகிப்பது?
இந்த எண்ணெய்யை தினமும் தேவையான அளவு எடுத்து தழும்பு மற்றும் ஸ்ட்ரெச் மார்க் உள்ள இடத்தில் அப்பளை செய்து நன்கு மசாஜ் செய்யவும், தொடர்ந்து மசாஜ் செய்யும் போது 30 நாட்களில் தழும்பு, ஸ்ட்ரெச் மார்க்கை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் ஈரப்பதத்தை சிறப்பாக தக்கவைக்க அதன் இயற்கையான தற்காப்பு வலுப்படுத்த உதவுகிறது,
கிரேப் ஃப்ரூட் எசன்ஸியல் ஆயில்
கிரேப் ஃப்ரூட் எசன்ஸியல் ஆயில் இது ஒரு இனிப்பு மற்றும் சிட்ரஸ் வாசனையுடையது. இதைப் பயன்படுத்தி, அரோமாதெரபி, தோல் பராமரிப்பு, உடல் எடை குறைப்பு, மெட்டாபாலிசத்தை அதிகரித்தல் போன்ற பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.
ரோஸ்மேரி ஆயில்
இது தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
ஜூனிபர் எசன்ஷியல் ஆயில்
ஜூனிபர் எசன்ஷியல் ஆயில், தோல் பராமரிப்பு பொருட்கள், மசாஜ் மற்றும் உடல் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.