நீங்கள் கடுமையான முடி உதிர்வை எதிர்கொள்கிறீர்களா. அப்படியென்றால் இந்த கதை உங்களுக்கானது. முடி வளர்ச்சிக்கு லாவெண்டர் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான சில எளிய வழிகள்
உச்சந்தலையில் மசாஜ்
சில துளிகள் லாவெண்டர் எண்ணெயை எடுத்து தேங்காய் எண்ணெய் உடன் கலக்கவும். கலவையை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
ஹேர் மாஸ்க்
லாவெண்டர் எண்ணெய் உடன் யோகர்ட், தேன் போன்றவற்றுடன் கலக்கவும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு தலையில் அப்படியே விட்டு அதன் பிறகு கழுவவும்.
ஷாம்பூவில் சேர்க்கவும்
லாவெண்டர் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு வழியானது ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சேர்ப்பதாகும். இது வாசனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான கூந்தலுக்கும் பங்களிக்கிறது.
சிகிச்சை
பாதாம் எண்ணெய் உடன் லாவெண்டர் எண்ணெய்யை கலந்து அதன் மூலம் தலைமுடியை ஈரப்பதமாக வைத்திருங்கள்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி போன்ற பிற அத்தியாவசிய எண்ணெய்களுடன் லாவெண்டர் எண்ணெயை இணைத்து ஒரு ஹேர் சீரம் உருவாக்கி பயன்படுத்தவும்.
வாசனை
ஒரு கப் தண்ணீரில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெயைச் சேர்த்து தலையில் சாம்பூ பயன்படுத்திய பிறகு உபயோகிக்கவும். இது உங்கள் தலைமுடியை வாசனையாக வைத்திருக்கும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இதை நண்பர்களுக்கு பகிருங்கள்