ஒரே வாரத்தில் பருக்களை இயற்கையாக அகற்றுவது எப்படி?


Sanmathi Arun
18-04-2023, 19:12 IST
www.herzindagi.com

பருக்களுக்கான தீர்வு

    முகப்பரு இல்லாத சருமம் பெற வேண்டும் என்றால் இயற்கை கொடுத்த சில மூலிகைகளை நாம் பயன்படுத்தலாம். அதில் மிக சிறந்த முகப்பரு நிவாரணியாக இருப்பது வேப்பிலை மற்றும் மஞ்சள் கலவை தான். முகப்பருவை இயற்கை மூலிகை கொண்டு எப்படி விரட்டலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Image Credit : freepik

எண்ணெய் பசை சருமத்திற்கு

    வேப்பிலை ஒரு கைப்பிடி, மஞ்சள் ஒரு சிறிய துண்டு, புதினா ஒரு பிடி மூன்றையும் ஒன்றாக அரைத்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விடவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். ஒரே வாரத்தில் முகப்பருக்கள் நன்கு குறையும்.

Image Credit : freepik

உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு

    வேப்பிலை ஒரு பிடி, தயிர் ஒரு ஸ்பூன், மஞ்சள் ஒரு துண்டு, எலுமிச்சை ஒரு சொட்டு சேர்த்து கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

Image Credit : freepik

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு

    வேப்பிலை ஒரு பிடி, மரிக்கொழுந்து ஒரு பிடி, கசகசா ஒரு பிடி, மஞ்சள் ஒரு துண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விடவும், பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்

Image Credit : freepik

அதிக முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு

    இரண்டு கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். பின் அரைத்த விழுதை ஒரு துணியில் வடிகட்டி அந்த சாறை மட்டும் எடுக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, சோற்று கற்றாழை கொஞ்சம் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் கழுவினால், எப்பேர்பட்ட முகப்பருக்களும் அகன்று விடும்

Image Credit : freepik

ஹார்மோன் பிரச்சனையால் வரும் முகப்பருக்களுக்கு

    வேப்பிலை ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, விரளி மஞ்சள் ஒரு துண்டு மூன்றையும் ஒன்றாக அரைத்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழிவினால், ஒரே வாரத்தில் ஹார்மோன் பிரச்சனையால் உருவாகும் முகப்பருக்களில் மாற்றம் தெரியும்.

Image Credit : freepik

முகப்பருக்கள் மற்றும் வடுக்களும் நீங்க

    முருங்கை இலை சாறு ஒரு ஸ்பூன், வேப்பிலை சாறு ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, இவற்றை கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய முகப்பருக்கள் நீங்கும். அதனால் ஏற்படும் தழும்புகளும் நீங்கும்

Image Credit : freepik

முகப்பருக்கள் வராமல் இருக்க உதவும் பொடி

    வேப்பிலை ஒரு கப், புதினா ஒரு கப், மஞ்சள் - 1 /4 கப், பச்சரிசி ஒரு கப், பாசிப்பருப்பு ஒரு கப், ஆரஞ்சு தோல் ஒரு கப் - இந்த பொருட்களை நன்கு காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு, தினமும் குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால், முகப்பருக்கள் வரவே வராது. இதுவரை இருந்த முகப்பருக்கள் கூட ஒரே வாரத்தில் குறைய ஆரம்பிக்கும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    சரும பிரச்சனை இருப்பவர்களும், தொடர்ந்து பயன்படுத்த நினைப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik