நடிகை தமன்னாவின் பளபளப்பான கூந்தல் ரகசியம்


Raja Balaji
25-03-2024, 17:25 IST
www.herzindagi.com

    பளபளப்பான மேனியை போலவே நடிகை தமன்னா ஆழகான கூந்தலை கொண்டவர். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு தமன்னாவின் முடி பராமரிப்பு வழக்கத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காய சாறு, தேங்காய் எண்ணெய்

    நடிகை தமன்னா தனது முடி வளர்ச்சிக்காக வெங்காய் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்யை கலந்து அதை தனது உச்சந்தலையில் வாரத்திற்கு ஒரு முறை தடவுகிறார்.

ஹெர்பல் வாஷ்

    ஒவ்வொரு வாரம் நடிகை தமன்னா தவறாமல் ஹெர்பல் ஹேர் வாஷ் செய்கிறார். தலைமுடியைக் கழுவ சிகைக்காய், நெல்லிக்காய் மற்றும் பப்பாளி போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துகிறார்.

ஹீட் ஸ்டைலிங் X

    நமக்கு கிடைத்த தரவுகளின்படி தமன்னா படப்பிடிப்பு நாட்களில் கூட ஹீட் ஸ்டைலிங்கை விரும்புவதில்லை. இது அவருடைய தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இயற்கை பொருட்கள்

    தனது தலைமுடிக்கு இயற்கையான பொருட்களையே தமன்னா பயன்படுத்துகிறார். இராசயன கலவைகளை பயன்படுத்துவதில்லை.

சத்தான உணவு

    முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவை மட்டுமே சாப்பிடுகிறார்.

உச்சந்தலையில் மசாஜ்

    வாரம் ஒரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து தனது முடியை வலுவாக வைத்திருக்கிறார்.