காதல் திருமணத்திற்கு பெற்றோர்களை சமாதானப்படுத்துவது என்பது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாங்கள் உங்களுக்கு சில குறிப்புகளை பகிர்ந்து கொள்ளப் போகிறோம். இதன் மூலம் உங்கள் காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோரை எளிதில் நீங்கள் சமாதானப்படுத்தலாம். இந்த குறிப்புகள் என்ன என்பதை இதில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா முழுவதுமே காதல் திருமணம் என்பது இன்னும் மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. உங்கள் திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்வி பெரும்பாலான புதுமணத் தம்பதிகளிடம் எழுகிறது. இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே மட்டுமல்ல. இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான திருமணம் என்று தற்போது வரை நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் காதலர்கள் தங்களின் காதலுக்கு குடும்ப உறுப்பினர்களை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் அதற்காக காதலர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பார்ககளா?இல்லையா? என்ற அச்சமும் காதலர்கள் மனதில் அதிகம் உள்ளது.
பலர் தங்கள் காதலுக்கு பெற்றோர்களை சமாதானப்படுத்த பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்கள். எனவே, நீங்களும் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கு உங்கள் பெற்றோரின் சம்மதம் தேவை என்றால் இந்த குறிப்புகளை நீங்கள் தாராளமாக பின்பற்றலாம்.
காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமா?
எல்லைகளை உடைக்கவும்
ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோர்களை மிகவும் நேசிக்கிறது. ஆனால், பல வீடுகளில் பல வகையான பிரச்சனைகள் உள்ளது. இன்னும் பல இளைஞர்கள் இளம்பெண்கள் தங்கள் பெற்றோருடன் நல்ல தொடர்பில் இல்லாமல் உள்ளனர். இதனால் பெற்றோருக்கும் உங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்படுகிறது. காதல் திருமணத்திற்கு உங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த விரும்பினால் நீங்கள் இந்த இடைவெளி எல்லைகளை உடைத்து பெற்றோர்களின் உற்ற நண்பனாக மாற வேண்டும். உங்கள் பெற்றோருடன் முடிந்தவரை அதிக நேரம் செலவழித்து உங்கள் காதல் துணையின் வருகைக்கு பிறகும் அவர்களின் உறவு அப்படியே இருக்கும் என்பதை பெற்றோருக்கு உணர்த்துங்கள்.
புத்திசாலித்தனமான திருமண பேச்சுகள்
பெற்றோருடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திய பிறகு . உங்களது பெற்றோர்கள் உங்கள் திருமணத்தைப் பற்றி பேசினால் உற்று கவனித்து அவர்களுக்கு எப்படிப்பட்ட மருமகள் அல்லது மருமகனை விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் காதலை உங்கள் பெற்றோர்களிடம் புத்திசாலித்தனமான வார்த்தைகளை பயன்படுத்தி சொல்ல வேண்டும்.
பெற்றோர்களின் ஒருவரின் நம்பிக்கையாவது பெறுங்கள்
இப்போது திருமணப் பேச்சுகளுக்கான உரையாடல் தொடங்கியது, உங்கள் பெற்றோர்களின் யாரை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்களோ அவரிடம் உங்கள் காதலை பற்றி சொல்லுங்கள், இதைவிட சிறந்தது எதுவுமில்லை. இல்லையெனில் நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் பெற்றோரில் அம்மா,அப்பா யாரிடமாவது நம்பிக்கை வைத்து உங்கள் காதல் துணையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
உறவினர்களின் உதவி
எல்லா உறவினர்களும் காதல் திருமணத்திற்கு எதிரானவர்கள் அல்ல. உறவினர்களின் உதவியை பெறுங்கள். குறிப்பாக, உங்கள் பெற்றோரை விட வயதானவர்கள் மற்றும் உங்கள் பெற்றோர் மிகவும் மதிக்கும் நபர்களின் உதவியை பெறுங்கள். இவர்கள் உங்களின் தாத்தா, பாட்டி அல்லது பெரிய மாமாக்கள், தாய் மாமன் மற்றும் அத்தைகளாகவும் இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் அவர்கள் உங்கள் பெற்றோரை நம்ப வைப்பதில் வெற்றி பெறுவார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் பற்றி காதல் துணையிடம் சொல்லவும்
உங்கள் காதல் துணையை உங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டிய மிக முக்கியமான பகுதி இப்போது வருகிறது. உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரை பற்றியும் முழுமையான தகவலை உங்கள் காதல் துணையிடம் சொல்ல வேண்டும். இந்த வழியில் உங்கள் காதல் துணை அவர்களை எவ்வாறு கையாள்வது என்று புரிந்து கொள்வார்.இது உங்கள் காதல் வெற்றி பெற மிகவும் உதவும்.
காதலர்களே! இந்த எளிய குறிப்புகளை மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டு உங்கள் காதலை பெற்றோரிடம் தெரிவித்து, காதல் திருமணத்தை பெற்றோர்களின் சம்மதத்தோடு நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றுங்கள்.
இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil
image source: freepi
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation