
ஒரு நல்ல சிகை அலங்காரம் உருவாக்கப்பட்டால் மட்டுமே முடி அழகாக இருக்கும். ஏனெனில் இது ஒரு உன்னதமான தோற்றத்தை அளிக்கிறது. கோரை முடி என்று சொல்லப்படும் நேரான முடியில் சிகை அலங்காரங்கள் உருவாக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சுருட்டை முடி இருபாவர்களுக்குச் சிகை அலங்காரங்களை உருவாக்குவதில் சிக்கலாக இருக்கும். ஏனெனில் சுருட்டை முடி பஞ்சு போன்றதாகவே இருக்கும். நீங்கள் ஒரு சிகை அலங்காரம் உருவாக்கும் நினைக்கும் போது முடியாது. இதுபோன்ற நிலையில் சில வித்தியாசமான சிகை அலங்காரங்கள் உருவாக்க வேண்டும். இது உங்கள் தலைமுடியைக் கலையாமல் நீண்ட நேரம் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் எந்த வகையான சிகை அலங்காரங்களை உருவாக்கலாம்.
மேலும் படிக்க: திருமண நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்

இந்த தலைமுடியை அமைக்க விரும்பினால் முதலில் முடிக்கு ஜெல் பயன்படுத்த வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் தலைமுடியை சீப்பை கொண்டு ஒரு பக்கம் சைடு வகிடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பக்க முடியை சரியாக அமைப்பில் ஃப்ரீ ஹேர் விடவும். முடி குறைவாக இருக்கும் மறுப்பக்கத்தில் கூந்தலை சுருட்டி மேல் முடியை விட்டுவிட்டு அடி பாக்கமாக கொண்டு வர வேண்டும். முடியின் உள்ளே ஒரு ஹேர் பின்னை கொண்டு சரியாக குத்தி அமைக்கவும். மறுபுறம் முடியைத் ஃப்ரீ ஹேர் விடவும். இந்த வழியில் உங்கள் சிகை அலங்காரம் செய்ய வேண்டும். நீங்கள் அதில் செயற்கை பாகங்கள் பயன்படுத்தலாம். இது தோற்றத்தையும் அழகாக மாற்றும். மேலும், நீங்கள் சிகை அலங்காரம் நீண்ட நேரம் களையமால் இருக்கும்.

சுருட்டை முடி எப்போதும் குழப்பமாக வடிவத்துடன் இருக்கும். அதில் பின்னலை உருவாக்குவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் இப்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இதற்கு ரப்பர் பேண்ட் எடுத்து போனிடெயில் போட்டு கொள்ளுங்கள். இதற்குப் பிறகு ஒரு நேரத்தில் சிறிது முடியை எடுத்து அதை முறுக்கி சைடு பின் கொண்டு மேல்நோக்கி அமைக்க வேண்டும். இப்போது ஒரு பாபி பின் எடுத்து மீதமுள்ள முடியை சரியாக முறையில் அமைக்கவும். வேண்டுமானால் சந்தையில் கிடைக்கும் பன் பஃப்பையும் பயன்படுத்தலாம். இப்போது நீங்கள் அதில் ஆடம்பரமான பாகங்கள் வைக்க வேண்டும். இதன் பிறகு உங்கள் சிகை அலங்காரம் தயார்.

தலைமுடியை அழகாக நீண்ட நேரம் நிர்வகிக்க அரை போனிடெயில் சிகை அலங்காரத்தை உருவாக்கலாம். இதற்கு முதலில் சீரம் அல்லது ஜெல் தடவி முடியை செட் செய்ய வேண்டும். பின்னர் ஒரு சீப்பு உதவியுடன் அரை பகிர்வு சிகை அலங்காரம் உருவாக்க முடியை பிரித்து எடுத்துக்கொள்ளவும். இதற்குப் ஒரு ரப்பர் பேண்ட் உதவியுடன் அதை அமைக்கலாம். உங்கள் முடி சிகை அலங்காரம் தயாராக இருக்கும். மேலும், உங்கள் தோற்றமும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க: இரவில் பெண்கள் மேக்கப்பை அகற்றுவதால் கிடைக்கும் 3 நன்மைகள்
இதன்பிறகு சுருள் முடியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இனி நீங்கள் இந்த சிகை அலங்காரம் தோற்றத்தை உருவாக்கலாம். இது உங்களை அழகாக மாற்றும். மேலும், உங்கள் தோற்றமும் வித்தியாசமாக இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com