oscar award for openheimer

Oscars 2024: ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்த ஓபன்ஹெய்மர்.. சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன்!

அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் 7 ஆஸ்கர் விருதுகள் வென்றுள்ளது ஓபன்ஹெய்மர் திரைப்படம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-03-30, 09:07 IST

அமெரிக்காவில் நடைபெற்ற 96வது ஆஸ்கர் விருது விழாவில் ஓபன்ஹெய்மர் திரைப்படம் அதிகபட்சமாக 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. யாரும் எதிர்பாராத அளவிற்கு ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது ஓபன்ஹெய்மர். இந்த 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

2023 ஆம் ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் படத்துக்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர் சிலியன் மர்பி, சிறந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், சிறந்த துணை நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், சிறந்த ஒளிப்பதிவு ஹொய்தே வான் ஹொய்தேமா, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் லுட்விக் கொரன்சன், சிறந்த படத்தொகுப்பு ஜென்னிபர் லேம் என்று பல ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது ஓபென்ஹெய்மர் திரைப்படம். 

சிறந்த நடிகர் சிலியன் மர்பி:

best actor

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஓபன்ஹெய்மர். அணுகுண்டை தயாரித்த ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு ஓபன்ஹெய்மர் படமாக உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜப்பானில்  உள்ள ஹிரோஷிமா நாகசாகி மக்கள் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாக கதாநாயகன் தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகள் ஆகட்டும், அல்லது இந்த உலகமே அழியப் போகுது என்று நினைக்கும் காட்சிகளிலும் சரி தனது நடிப்பால் சிலியன் மர்பி பிரமிக்க வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை தியேட்டரில் காண சென்ற ரசிகர்கள் பலருக்கும் இந்த காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்தது. 

சிறந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்:

best director

இதற்கு முன்னதாக இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனட் உள்ளிட்ட பல சிறப்பான ஹாலிவுட் படங்களை இயக்கி உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள ஒரு பிரபல ஹாலிவுட் இயக்குனர் தான் கிறிஸ்டோபர் நோலன். இந்த இயக்குனருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ் ரசிகர்கள் பலரும் இவரின் திரைப்படம் வெளியாகும்போது மறக்காமல் தியேட்டர்களில் பார்ப்பதற்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் முதல் முறையாக ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநர் விருதை ஓபன்ஹெய்மர் படத்துக்காக கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த துணை நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் முதல் முறையாக அயன் மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இவர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹேமர் திரைப்படத்தில் லூயிஸ் ஸ்டராஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக ஓபன்ஹெய்மர் திரைப்படத்தில் நடித்ததற்காக, கோல்டன் குளோப்ஸ் விருது, பிரிட்டிஷ் அகாடமி பிலிம் விருது மற்றும் விமர்சகர்களின் சாய்ஸ் மூவி விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளை இவர் வென்றிருந்தார். இந்த நிலையில் முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்றதற்கு நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

Image source: google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com